டெல்லி : நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் முறை, தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் நீதிபதிகள் தொடர்பான அனைத்து விவரங்களும் உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில், பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்தார். அவற்றில் நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பங்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும் தரவுகள் மற்றும் அவற்றின் மீதான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முடிவு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025ம் ஆண்டு மே 5ம் தேதி வரை, உச்சநீதிமன்ற கொலீஜியதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட தேதி, நியமிக்கப்பட்ட தேதி, சமூக வகுப்பு, முன்னாள் அல்லது தற்போது பணியில் உள்ள உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களும் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
The post நீதிபதிகள் நியமன நடைமுறைகளை மக்கள் பார்வைக்காக இணையத்தில் வெளியிட்டது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

