×

தஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ராஜவீதிகளில் 7ம் தேதி மின்தடை

 

தஞ்சாவூர் மே.6: தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ராஜ வீதிகளில் நாளை (7ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (7ம் தேதி) தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜவீதி முழுவதும், மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைதெரு, நாலுகால் மண்டபம், மாட்டு மேஸ்திரி சந்து, மாட்டு சந்தை ரோடு, சிரேஸ் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 7ம் தேதி காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ராஜவீதிகளில் 7ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.

Tags : Thanjavur Periyakoil Therottam ,Thanjavur ,Electricity Board ,Peruvudaiyar ,Thirukoil Chithirai ,Peruvizha Therottam ,Dinakaran ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்