×

மது போதை மறுவாழ்வு மையத்திற்கு டிவி, விளையாட்டு பொருட்கள்

 

காரைக்கால், மே 6: காரைக்கால் மையப் பகுதியில் சமூக நலத்துறை கீழ் காந்திஜி ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வுமையம் இயங்கி வருகிறது. இதில் மது போதைக்கு அடிமையாகி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொழுபோக்கிற்காக டிவி, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்க ஜி.என்.எஸ்.அறக்கட்டளை நிறுவனரும் புதுச்சேரி பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.கோரிக்கையை ஏற்று ஜி.என்.எஸ்.ராஜசேகரன் காந்திஜி ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வுமையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு டிவி, புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்களை இன்று வழங்கினார்.

The post மது போதை மறுவாழ்வு மையத்திற்கு டிவி, விளையாட்டு பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : addiction ,Karaikal ,Gandhiji Integrated Alcohol Addiction Rehabilitation Center ,Social Welfare Department ,alcohol addiction rehabilitation center ,Dinakaran ,
× RELATED ஜவுளி சங்க பொதுக்குழு கூட்டம்