- கூடலூர்
- குள்ளப்பகவுண்டன்பட்டி
- தேனி மாவட்டம்
- குள்ளப்பகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்
- கருநாகமுத்தன்பட்டி…
- தின மலர்
கூடலூர், மே 6: தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குள்ளப்பகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்திலும், அரசு துவக்கப்பள்ளியில் ஒரு இலவம் மரமும், கருநாக்கமுத்தன்பட்டி செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக பள்ளி விடுமுறை என்பதாலும், சாலையில் வாகனங்கள் போக்குவரத்து இல்லாத நேரத்திலும், மற்ற இடங்களில் யாருக்கும் மரவிழுந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சாலையில் மரம் விழுந்து கிடந்ததினால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கூடலூர் அருகே சூறைக்காற்றுடன் வெளுத்த மழை மரங்கள் சாய்ந்தன appeared first on Dinakaran.