×

பழைய ஓய்வூதியம் கேட்டு ராமேஸ்வரத்தில் டூவீலர் பேரணி

 

ராமேஸ்வரம், மே 6: ராமநாதபுரம் மாவட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சென்னை நோக்கி செல்லும் மாநிலம் தழுவிய இருசக்கர பேரணியை நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திலிருந்து துவங்கினர்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றி பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இருசக்கர வாகனப் பிரசாரத்தை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

The post பழைய ஓய்வூதியம் கேட்டு ராமேஸ்வரத்தில் டூவீலர் பேரணி appeared first on Dinakaran.

Tags : Two-wheeler rally ,Rameswaram ,Ramanathapuram ,CBSE ,wheeler ,Chennai ,Abdul Kalam National Memorial ,Two-wheeler rally in Rameswaram demanding ,
× RELATED கெடார் அருகே நள்ளிரவில் நகை கடை ஷட்டரை...