- வருமானவரித் துறை
- கோயம்புத்தூர்
- இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்
- நவ இந்தியா, கோயம்புத்தூர்
- ICAI
- தின மலர்
கோவை, மே 6: கோவை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் மற்றும் வருமான வரித்துறையினருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை நவஇந்தியா அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஐசிஏஐ அணி டாஸில் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வருமான வரித்துறை அணி 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. இந்த அணி சார்பாக பேட்டிங் செய்த டி.சந்தோஷ் 79 பந்துகளில் 173 ரன்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த ஐசிஏஐ அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார்.
வருமானத்துறை அணி சார்பாக விளையாடி 173 ரன்கள் எடுத்த டி.சந்தோஷூக்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது வழங்கப்பட்டது.
The post 25 ஓவர் கிரிக்கெட் போட்டி வருமான வரித்துறை அணி வெற்றி appeared first on Dinakaran.