சிவகங்கை: சிவகங்கையில் பாஜ சார்பில் காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வு எழுத வந்த பெண்ணின் தாலியை கழற்ற சொன்னது கடும் கண்டனத்துக்குரியது. அதற்கு காரணமான அலுவலர் பணியில் இருந்தே நீக்கப்பட வேண்டும். கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் கூறுவதை நான் நம்புகிறேன். காவல்துறை கூறுவதை நம்பவில்லை. கூட்டணி, தொகுதி எண்ணிக்கை, கூட்டணி ஆட்சியா என்பது குறித்து பாஜ தலைமைதான் முடிவு செய்யும். நடிகர் என்பதற்காக கூடுகிற கூட்டம், அரசியலில் வெற்றியைத் தருமா என கூற முடியாது. இவ்வாறு தெரிவித்தார். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். அனைத்தையும் முடிவு செய்வார்கள் என கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து பாஜ தலைமை தான் முடிவு செய்யும் என எச்.ராஜா தெரிவித்துள்ளது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
The post தொகுதி, கூட்டணி ஆட்சி பாஜதான் முடிவு செய்யும்: எச்.ராஜா தடாலடி appeared first on Dinakaran.
