×

திராவிட இன எழுச்சி, பொங்கும் தமிழ் உணர்வு, பெண் விடுதலை, சமுக நீதிக்கு அடையாளம் பாரதிதாசன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிட இன எழுச்சி, பொங்கும் தமிழ் உணர்வு, பெண் விடுதலை, சமுக நீதிக்கு அடையாளம் பாரதிதாசன். பாரதிதாசன் கவிதைகள் முழங்கிட கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால், பேருணர்ச்சியல் தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
திராவிட இன எழுச்சி – பொங்கும் தமிழ் உணர்வு – பெண் விடுதலை – சமத்துவம் – சமூகநீதி – தமிழ் இலக்கிய அழகியல் – தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!

எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை!

தமிழ்நாடெங்கும் நடைபெற்ற தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே… பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்!

இது போதுமா? நம்முடைய களம் பெரிது – அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்! தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க! என கூறப்பட்டுள்ளது.

The post திராவிட இன எழுச்சி, பொங்கும் தமிழ் உணர்வு, பெண் விடுதலை, சமுக நீதிக்கு அடையாளம் பாரதிதாசன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Bharathidasan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Pavendar ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...