×

க.பரமத்தி அருகே மதுரைவீரன் கோயில் திருவிழா

 

 

க.பரமத்தி, மே 5: க.பரமத்தி அருகே புன்னம்பசுபதிபாளையம் மதுரைவீரன் கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் 3ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவையொட்டி வரும் 8ந்தேதி வியாழன் அன்று உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோவிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்து இரவு விநாயகர் வழிபாடும் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு மாவிளக்கும் பக்தர்களால் தரிசனம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து மறுநாள் திருவிழாவின் முக்கிய நிழல்வான கிடா வெட்டு நிகழ்ச்சி 9ந்தேதி பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

The post க.பரமத்தி அருகே மதுரைவீரன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Madurai Veeran Temple Festival ,K.Paramathi. ,K.Paramathi ,Punnampasupathipalayam ,Madurai Veeran ,Pommiyammal ,Vellaiyammal ,Karuppannaswamy ,Colony Road of Pasupathipalayam ,Punnam Panchayat ,K.Paramathi Union… ,
× RELATED உள்வீரராக்கியம் பகுதியில் நிழற்குடை அமைக்க கோரிக்கை