×

காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

ராஜபாளையம், மே 5: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக காமிக்ஸ் நூலகம் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மே 3ம் தேதி இலவச காமிக் புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ராஜபாளையம் காமிக்ஸ் நூலகம் மற்றும் சிவகாசி அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதில் 7 முதல் 10 வரை உள்ள மாணவர்களுக்கு 30 குறள் மற்றும் 11 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு 50 குறள் ஒப்புவித்தல் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ராஜபாளையம் காமிக்ஸ் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 129 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 53 பேர் வெற்றி பெற்றனர். இதுபோன்று சிவகாசி அறிவுசார் மையத்தில் நடந்த போட்டியில் 165 மாணவர்கள் கலந்து கொண்டு 65 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் சித்திர கதை புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

The post காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Comic Book Day ,Rajapalayam ,India ,Rajapalayam, Virudhunagar district ,Free Comic Book Day ,Rajapalayam Comics… ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்