×

மார்த்தாண்டத்தில் பெண் அணிந்திருந்த 2.5 பவுன் நகை மாயம்

 

மார்த்தாண்டம், மே 5: குழித்துறை அருகே உள்ள குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் நாயர். இவரது மனைவி ராதா தேவி (61). மார்த்தாண்டத்தில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராதா தேவி திருத்துவபுரத்தில் இருந்து மார்த்தாண்டத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் செயின் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராதா தேவி மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டத்தில் பெண் அணிந்திருந்த 2.5 பவுன் நகை மாயம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Vasudevan Nair ,Gurumathur ,Kuzhithurai ,Radha Devi ,Thiruthuvapuram ,Marthandam… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா