×

ரெட்டிச்சாவடி அருகே எஸ்ஐ தாயிடம் 3 பவுன் செயின் பறிப்பு

 

ரெட்டிச்சாவடி, மே 5: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த மேட்டுப்பாளையம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலாட்சி(53). இவரது கணவர் செங்கேணி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் தற்போது சென்னை மாம்பலம் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால், அதே பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் நிழலான பகுதியில் அஞ்சலாட்சி கூழ் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்து அஞ்சலாட்சியிடம் கூழ் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர் கூழ் செம்பை கழுவிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அருகில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு அஞ்சலாட்சி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலாட்சியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரெட்டிச்சாவடி அருகே எஸ்ஐ தாயிடம் 3 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Bow Chain ,Redtichawadi ,Retichawadi ,Anjaladchi ,Pudukkada ,Matuppalayam, Cuddalore district ,Sengeni ,Chennai ,Mambalam Police ,Bow ,Rettichawadi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா