- சின்னலபட்டி டவுன் பஞ்சாயத்
- திண்டுக்கல்
- கலெக்டர்
- சரவணன்
- அண்ணாய் சத்ய பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்
- சின்னாளப்பட்டி
- தின மலர்
திண்டுக்கல், மே 5: சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக கலெக்டர், சின்னாளப்பட்டியில் உள்ள அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். பின்னர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். ெதாடர்ந்து கலெக்டர் இப்பணிகளை தரமாக, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post சின்னாளபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.
