×

ஒட்டன்சத்திரத்தில் மே தின பேரணி

ஒட்டன்சத்திரம், மே 3: ஒட்டன்சத்திரத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு இணைப்பு குழு சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. சிஐடியு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்து துவங்கிய பேரணி பஸ் நிலையம், பழநி சாலை வழியாக தாராபுரம் சாலை வரை சென்றது.

இதில் விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் வசந்தாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, விவசாய சங்கம் ஒன்றிய தலைவர் பெரியசாமி, அரசு போக்குவரத்து கழகம் மத்திய சங்கம் செயலாளர் சின்னப்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி மே தின கொடி ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சிவமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் மே தின பேரணி appeared first on Dinakaran.

Tags : May Day rally ,Ottanchatram ,May Day ,Indian Trade Union Centre CITU ,CITU ,Murugesan ,State Transport Corporation ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்