×

நடிகை விவகாரம் சீமான் வழக்கு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய சீமான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை 12 வாரத்தில் முடிக்க போலீசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சீமான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்திருந்தது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் அனைத்து தரப்பினரும் கூடுதல் மனு மற்றும் வக்காலத்தாமா ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முன்னதாக இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை என்பது தொடரும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஜூலை 31க்கு ஒத்திவைத்தனர்.

The post நடிகை விவகாரம் சீமான் வழக்கு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Supreme Court ,New Delhi ,Vijayalakshmi ,Valasaravakkam ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு...