×

மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளாவில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுபயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுற்றுபயணம் செய்கிறார். இன்று மும்பையில் நடக்கும் வேவ்ஸ் எனப்படும் உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிரா அரசால் நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு மே 4 வரை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது.

அங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி இன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். நாளை ரூ.8,900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதன் பின்னர் ஆந்திர மாநிலம் அமராவதி செல்லும் பிரதமர் மோடி ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஆந்திராவில் 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

The post மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளாவில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுபயணம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Maharashtra ,Andhra Pradesh ,Kerala ,New Delhi ,World Audio Visual Entertainment Conference ,WAVES ,Mumbai ,Maharashtra government… ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...