×

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; 1.25 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தின் மூலம் ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும்; 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

The post மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,D. R. B. ,Chennai ,India ,T. R. B. ,king ,Chennai Chief Secretariat ,T. R. B. Raja ,Tamil ,Nadu ,D. R. B. Raja ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை