×

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் மயிலை தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் ஒரு கை பார்ப்போம்.

எங்கள் உயிரே போனாலும் சர்வாதிகாரத்துக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம் என்றார் கலைஞர். திமுகவின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். முந்தைய ஆட்சியில் ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு இன்று திராவிட மாடல் ஆட்சியில் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டுகின்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று கூறினார்.

The post 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA Thackeray ,Anna Adarawalayathil Mayilai Batch ,MLA ,Velu Palace ,Dimuka ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...