×

தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் ரூ.38.25 கோடியில் நடமாடும் தடய அறிவியல் வாகனம்

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தடய அறிவியல் துறையின் குற்ற நிகழ்விடப்பார்வையிடல் விசாரணை முறையை வலுப்படுத்த, 50 நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள், அதற்கான பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றிற்கென ரூ.38.25 கோடி வழங்கப்படும்.

தடய அறிவியல் துறையில் உள்ள கணினி தடய அறிவியல் பிரிவை வலுப்படுத்தும் வகையில் கணினி மென்பொருட்கள் மற்றும் கணினி வன்பொருட்களை வாங்குதல், மென்பொருள் பயன்பாட்டிற்கான உரிமங்களை புதுப்பித்தல் மற்றும் மனிதவளத்திற்கு ஊதியம் வழங்குதல் ஆகியவை ரூ.15.16 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

The post தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் ரூ.38.25 கோடியில் நடமாடும் தடய அறிவியல் வாகனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Legislative Assembly ,Forensic Science Department ,Forensic Science Department… ,Dinakaran ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...