×

குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்

காந்திநகர்: குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது. குஜராத்தின் பூஜ், கட்ச்சில் உள்ள பிரதீப் சர்மாவுக்கு சொந்தமான வீட்டு மனைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மோசடி புகாரின் பேரில் பிரதீப் சர்மா, அவரது நண்பர் சஞ்சய் ஷா உள்ளிட்டோர் மீது குஜராத் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் போலீஸ் பதிந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பூஜ் நீதிமன்றம், பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

The post குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : IAS ,Pradeep Sharma ,Gujarat ,Gandhinagar ,Enforcement Directorate ,Bhuj ,Kutch ,Pradeep… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!