×

மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி

 

கமுதி, ஏப்.29: கமுதியில் மின்னல் தாக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன. கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவ்வப்போது, இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கமுதி அருகே கோட்டையூர் கிராம பகுதியில் நேற்று இடியுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் மல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருணாமூர்த்தி(40) கோட்டையூர் பகுதியில் தங்கி ஆடு மேய்த்து வருகிறார். மழை பெய்த போது அவர் கண்மாய் பகுதியில் தனது ஆடுகளுடன் மரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் பலியாகின. மேலும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கருணாமூர்த்தி மயக்க நிலையடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kottayur ,Kamudi… ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது