×

ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்

 

வத்தலக்குண்டு ஏப். 29: வத்தலக்குண்டுவில் வீட்டு வரி மறு ஆய்வு செய்ய கூட்டம் நடந்தது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல் 3 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குப்புசாமி தலைமை வகித்தார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாற பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கலெக்ட்ர அலுவலக சார்பாக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் கருப்பசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகளாக . விருவீடு, குன்னு வாரன்கோட்டை, நடகோட்டை ஆகிய 3 ஊராட்சிகள் அறிவிக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாற பாண்டியன் ஊராட்சி செயலாளர்கள் செல்லத்துரை, சுரேஷ், ரஞ்சிதா ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அழகுமணி நன்றி கூறினார்.

The post ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Wattalakundu ,Panchayat Secretaries ,Unions ,Nilakottai ,Kodaikanal ,Wattalakundu Panchayat Union ,Panchayat Union ,Commissioner ,Kuppusamy… ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்