அன்னூர், ஏப்.29: காளப்பட்டி புது காலனியை சேர்ந்த சின்னான் மகன் ரங்கநாதன் (54), இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக இளைப்பு நோய் அதிகரித்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் இருப்பவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுத்துவிட்டு வெளியே சென்று விட்டனர். இதனால், மனமுடைந்த ரங்கநாதன் சால்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மது குடிக்க பணம் தராததால் காவலாளி தற்கொலை appeared first on Dinakaran.