×

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 59 பேர் கைது: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிரவாத தடுப்புக்குழு 2024ம் ஆண்டு தமிழக காவல்துறையில் தொடங்கப்பட்டது. இந்த பிரிவுக்கு சென்னை, கோவை, மதுரை பகுதிகளில் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த தீவிரவாத தடுப்புக் குழு 2012ம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் தொடர்புடைய பிரபல குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டது. கோவை மற்றும் நாகர்கோவில் வழக்குகளில் தொடர்புடைய 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் தீவிரவாத தடுப்பு குழுவினரால் கைது ெசய்யப்பட்டனர்.

கோவையில் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக உபயோகப்படுத்தப்படாத ரவைகளுடன் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை தீவிரவாத தடுப்பு குழுவினர் திருப்பூரில் கடந்த 12.1.2025 மற்றும் 25.1.2025 ஆகிய நாட்களில் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 59 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த குழுவினர் 9.10.2024 அன்று தீவிரவாத கொள்கைகளை பின்பற்றி வந்த 13 பேருக்கு மனநல மருத்துவர் உதவியோடு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 59 பேர் கைது: கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Assembly ,Terrorism Prevention Unit ,Tamil Nadu Police ,Coimbatore ,Madurai ,Tiruppur ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...