×

சட்டமன்றப் பேரவையில் ஓ.எஸ்.மணியன் சிலைகள் மீட்பு குறித்து பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (28.03.2025) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக்கோரிக்கையின் போது வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் சிலைகள் மீட்பு குறித்து பேசியதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார்.

“இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் பேசுகின்ற போது இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்று ஒரு கேள்வியை எழுப்பினார். 07.05 2021 முதல் 31.03.2025 வரையில் 236 உலோக சிலைகள் இந்த திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் மீட்கப்பட்டுள்ளது.

அதுபோல் 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் கையில் இருக்கின்ற காவல்துறை தான் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்டிருக்கிறது என்பதைனை பேரவைத்தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

The post சட்டமன்றப் பேரவையில் ஓ.எஸ்.மணியன் சிலைகள் மீட்பு குறித்து பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,O.S. ,Manian ,Chennai ,Hindu ,Religious and Endowments ,P.K. Sekarbabu ,MLA ,O.S. Manian ,Police, Fire and ,Department ,Tamil Nadu Legislative Assembly ,Legislative Assembly ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...