×

பெரியார் பல்கலை. நூலகரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்வதாக 51 குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேடாக நூலகர் நியமனம் நடைபெற்றதாக பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கடிதம் அளித்தனர். புகாரின்பேரில் பல்கலை. நூலகர் ஜெயபிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post பெரியார் பல்கலை. நூலகரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை