×

அக்னி நட்சத்திரம்.. மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும்: மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதலாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக வேலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சாவூர், சேலம், மதுரை, திருத்தணி, கோவை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனிடையே பல பகுதிகளில் நல்ல மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தது. தற்போதும் நேற்று முதலாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்ட நிலையில், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் மலை பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கோடைக்காலத்தில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் காலமானது உச்ச வெப்பநிலையை அளிக்கும் காலமாக உள்ளது. இதை கத்திரி வெயில் என்றும் கூறுவர். இந்த நாட்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வெப்பநிலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அக்னி நட்சத்திரம்.. மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும்: மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Agni ,Chennai ,Tamil Nadu ,Vellore ,Erode ,Karur Paramathi ,
× RELATED முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு