கோவை, ஏப். 28: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிரஸ்காலனி பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியார் பஸ்கள் சரிவர நிறுத்தாமல் இருப்பதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மருதவாணன் என்ற பயணி புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரஸ்காலனி பேருந்து நிறுத்தத்தில் மேட்டுப்பாளையம்-கோவை வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியக்குமார், பொதுமக்களின் நலன் கருதி மேட்டுப்பாளையம்-கோவை வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றியும்,
இறக்கியும் செல்ல வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
The post பிரஸ் காலனியில் பஸ்கள் நிறுத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.