×

டென்மார்க்கில் சூர்யா, ஜோதிகா: வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்

சிவா இயக்கும் ’கங்குவா’ என்ற 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் 3டி படத்தில் நடிக்கிறார், சூர்யா. பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘சூரரைப்போற்று’, இந்தியில் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடித்த கேரக்டரில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார், அபர்ணா பாலமுரளி நடித்த வேடத்தில் ராதிகா மதன் நடித்துள்ளனர்.

சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் இசை அமைத்திருந்த ஜி.வி.பிரகாஷ் குமாரே இந்தி ரீமேக்கிற்கும் இசை அமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் சூர்யாவும், ஜோதிகாவும் டென்மார்க்கின் ஃப்ரோ தீவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட போட்ேடாக்கள் வைரலாகி வருகின்றன.

The post டென்மார்க்கில் சூர்யா, ஜோதிகா: வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Siva ,Bollywood ,Disha Pathani ,Suta Konkara ,Movement ,Surya ,Aberna Balamurali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...