- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்
- சபாஷ் சபலெங்கா
- நிர்மலா
- மாட்ரிட்
- அரினா சபாலெங்கா
- வெகிக்ச் டோனா
- மாட்ரிட், ஸ்பெயின்
- போராடுகிறார்
- தின மலர்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, குரோஷிய வீராங்கனை டோனா வெகிச் அபார வெற்றி பெற்றனர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் குரோஷிய வீராங்கனை டோனா வெகிச், அமெரிக்க வீராங்கனை எம்மா நவாரோ மோதினர். முதல் இரு செட்களில் இருவரும் சளைக்காமல் ஆடியதால், ஆளுக்கு ஒன்றை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டை டோனா எளிதில் வசப்படுத்தினார். அதனால், 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டோனா வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் பெலாரஸை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, பெல்ஜியத்தை சேர்ந்த உலகின் 26ம் நிலை வீராங்கனை எலிசே மெர்டென்ஸ் மோதினர். இப் போட்டியில் சபலென்காவுக்கு ஈடுகொடுத்து எலிசே ஆடியதால், முதல் இரு செட்களில் தலா ஒன்றை இருவரும் கைப்பற்றினார். இருப்பினும், 3வது செட்டை சபலென்கா எளிதில் வசப்படுத்தினார். அதனால், 3-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சபலென்கா வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவில் டாம்மி, காஷனோவ் அபார வெற்றி
ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் டாம்மி பால், பிரேசில் வீரர் ஜோவா பிராங்கா ஃபொன்சேகா மோதினர். சவாலாக இருந்த இரு செட்களையும், டாம்மி பால் அபாரமாக ஆடி, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீரர் கரேன் அப்கரோவிச் காஷனோவ், அமெரிக்க வீரர் ரெய்லி ஒபல்கா மோதினர். இந்த போட்டி கடினமாக இருந்தபோதும், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் காஷனோவ் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபாஷ் சபலென்கா; போராடி வீழ்ந்த எலிசே appeared first on Dinakaran.