×

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிப்பு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Bonmudi ,Senthil Balaji ,Tamil Nadu Cabinet ,Chennai ,Chief Minister ,K. ,Tamil ,Nadu ,Stalin ,Ponmudi ,Transport Minister ,Sivashankar ,Housing Minister ,Muthusamy ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...