×

காவிரியில் புதிய பாலம் கட்டுமான பணி

திருச்சி, ஏப் 11: திருச்சி, புதிய காவிரி பாலம் கட்டுமான பணியை கண்காணிப்பு பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார். திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட தமிழ்நாடு அரசு ரூ.106 கோடி நிதி ஒதுக்கியது. பழைய பாலம் வழுவிழந்து வருவதாலும், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாகவும் இந்த திட்டம் அமைந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் வரண்டதாலும் புதிய பாலம் கட்டுமான பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பாலம் கட்டுமாக பணியினை கண்காணிப்பு பொறியாளர் ராமேஷ் கள ஆய்வு செய்தார். இந்த பாலம் கட்டுமான பணிக்கு 120 நில – தூண் அடிமானங்கள் கொண்டதாகும். இதில் தற்போது 96 பீம்களில் 41 பீம்கள் அமைக்கும் நிறைவடைந்துள்ளது. நில தூண் அமைக்கும் பணி யின் ஆழம், பயன்படுத்தப்படும் கம்பிகளின் அளவு ஆகியவற்றை பொறியாளர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்திட பணியாட்டுகளுக்க அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் நடராஜன், அசோக் குமார் ஆகியோர் இருந்தனர்.

The post காவிரியில் புதிய பாலம் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Trichy ,Cauvery bridge ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED உப்பிலியபுரம் அருகே பட்டுப்பூச்சி...