×

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

சங்கரன்கோவில், ஏப்.27: தென்காசி மாவட்ட நிர்வாகம், சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்திய பிளாஸ்டிக் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி சங்கரன்கோவிலில் நடந்தது. இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் தேரடி, கோயில்வாசல், மெயின் ரோடு, பேருந்து நிலையம், சங்கர்நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிளாஸ்டிக் பாதிப்புகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் கைலாசம், ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சின்னச்சாமி, வர்த்தகர் சங்கம் குருநாதன், கவுன்சிலர் புஷ்பம் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,Tenkasi District Administration ,Sankarankovil Municipality ,Tamil Nadu Pollution Control Board ,Sankarankovil.… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா