சென்னை: ஜி.கே மணிக்கு எதிராக அன்புமணியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கடந்த சில நாட்களாகவே பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூதகரமாக வெடித்து வருகிறது. தற்போது தான் இந்த பிரச்சனை வெளியே தெரிந்தாலும், இவை கடந்த 3 ஆண்டுகளாகவே பாமகவில் நீடித்து வருகிறது. இவை அன்புமணிக்கோ- ராமதாசுக்கோ அல்ல, இது அன்புமணிக்கும், ஜி.கே மணிக்கும் இடையே தான் பிரச்சனை என கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை சொன்னாலும், ஜி.கே மணியை வெளிப்படையாக திட்ட பாமகவிற்கு இப்போது தான் பாயிண்ட் கிடைத்துள்ளது. இவை தற்போது ஜி.கே.மணிக்கு எதிராக திரும்பியுள்ளது.
இதற்குப் பின்னணியில் இளைஞர் அணி தலைவர் பதவி தான் இருக்கிறது என்கின்றனர் அந்த கட்சியை சேர்ந்தவர்கள். பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி, ஜிகே மணி வகித்து வந்த பதவியை பெற்று பாமக தலைவர் ஆனார். இதனால் அன்புமணி வகித்து வந்த பாமக இளைஞர் அணி தலைவர் பதவியை தனது மகன் தமிழ் குமரனுக்கு வாங்கி கொடுத்தார் ஜிகே மணி. அதற்கு பிறகு தமிழ்குமரன் தனது பதவியில் இருந்து அவராகவே விலகிக் கொண்டார். ஆனால் அன்புமணியால் தான் தனது மகனின் பதவி போனது என அன்புமணிக்கு எதிராக ஜிகே மணி செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமதாசின் மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அந்த மேடையிலேயே ராமதாசுக்கும் அன்புமணிக்கும் மோதல் வெடித்தது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது.அவனுக்கு இளைஞர் சங்க தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்? என அன்புமணி வெளிப்படையாகவே பேசினார்.
இதன் காரணமாகவே, அன்புமணிக்கு எதிராக ஜி.கே. மணி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் சவுமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், தேர்தல் பணியை ஜி.கே. மணி சரியாக ஒருங்கிணைக்காதது தான் சவுமியாவின் தோல்விக்கு காரணம் என்றும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே கட்சிக்கு அவர் துரோகம் செய்கிறார் என்றும், அவரை கவுரவ தலைவர் பதவியில் இருந்து மட்டுமின்றி கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என பாமகவினர் பலர் பதிவிட்டு வருகின்றனர். அன்புமணியால் தான் தனது மகனின் பதவி போனது என அன்புமணிக்கு எதிராக ஜி.கே.மணி செயல்படுவதாக கூறப்படுகிறது.
The post ஜி.கே.மணிக்கு எதிராக பாயும் அன்புமணி ஆதரவாளர்கள்: பாமகவில் அடுத்தடுத்து மோதல் appeared first on Dinakaran.