×

பேரவையில் அமைச்சர் பதில் சிகரெட் லைட்டர்களுக்கு விரைவில் தடை

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ (அதிமுக) பேசுகையில், ‘‘சிகரெட் லைட்டர் தீப்பெட்டி தொழிலை பாதிக்கிறது. அரசு சுற்றுச் சூழல் துறையின் மூலமாக லைட்டரை தடை செய்யலாம்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘காஸ் லைட்டர்களில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது என்பதை அறிவோம். எனவே, இதை முற்றிலுமாக தடை செய்வதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய பரிந்துரையை, நாம் அளித்திருக்கக்கூடிய கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். அந்த பரிந்துரையை இப்போது அரசுக்கும் அளித்திருக்கிறார்கள். அரசினுடைய பரிசீலனையில் அது இப்போது இருக்கிறது. விரைவில் முதல்வரிடத்தில் ஒப்புதல் பெற்று, அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு நிச்சயமாக மேற்கொள்ளும்’’ என்றார்.

The post பேரவையில் அமைச்சர் பதில் சிகரெட் லைட்டர்களுக்கு விரைவில் தடை appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Kovilpatti ,MLA ,Kadambur Raju ,AIADMK ,Thangam… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...