×

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில்,‘‘டாஸ்மாக் நிர்வாகம் அரசு சார்ந்தது ஆகும்.

அதில் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்த வேண்டும் என்றால் அரசிடம் முன்கூட்டியே காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்வது மட்டுமில்லாமல், அமலாக்கத்துறை சோதனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chennai High Court ,Enforcement Department ,Tasmak ,Tamil Nadu ,Tamil Nadu government ,Tamil ,Government ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...