×

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரிரங்கன் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர். மிகச் சிறந்த அறிவியலாளராக இருந்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் என பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chairman Kasthurirangan ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Padma Vibhushan Kasthurirangan ,Former ,CM ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...