×

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளிகள், பணியாளர் சங்கங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. கலைஞரின் வழித்தோன்றலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வை நீக்கி தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர். உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் என்றால் மிகை அல்ல. தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் பெயர்களிலும், இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சீரான கல்வி வழங்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர் கலைஞர்.

இந்த தேசத்தில் ஆளுமை மிக்க ஆழ்ந்த இலக்கிய புலமை வாய்ந்த அரசியல் வித்தகர் அரசியல் சாணக்கியர் என எல்லா திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் வாழ்ந்தார் என்றால் அது கலைஞர்தான். நாட்டிலேயே முதலிடத்திற்கு வந்திருக்கக்கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அத்தகைய தலைவர்களில் முக்கியமானவர் கலைஞர். அப்படி கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில், கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டி வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளிகள், பணியாளர் சங்கங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,People's Progress Association ,state ,president ,Re. Thangam ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு