×

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 28ம் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையலாம். முதற்கட்டமாக வரும் 28ம் தேதி முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பூர்த்தி செய்து, அனைத்து உரிய ஆவணங்களை வரும் மே மாதம் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : MGR Film College ,Chennai ,Tamil Nadu government ,MGR Film and Television Training Institute ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...