×

மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ காமராஜ் மேட்டூர் அணை திறப்பு, மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அதில்,

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மண் திட்டுகளாக இருக்கின்றன. 12 மாவட்டங்களில் 5,021 கிலோமீட்டர் நீளத்துக்கு பாசன கால்வாய்களை முன்னுரிமை அடிப்படையில் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர். மே இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூன் 12-இல் நீர் திறக்கப்படும் இவ்வாறு பேசினார்.

 

The post மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Minister ,Duraimurugan ,Chennai ,Legislative Assembly ,Tamil Legislative Branch ,Adimuka MLA ,Kamaraj Mattur ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...