×

அரிமளத்தில் ரூ.5.9 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி

திருமயம், ஏப்.25: அரிமளத்தில் ரூ.5.9 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக கட்டிடத்தை கலெக்டர் அருணா நேரில் சென்று ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.5.9 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினை, மாவட்ட கலெக்டர் அருணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தெரிவித்த கலெக்டர் அருணா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் காத்திடும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராமப்புறங்களில் சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணி மற்றும் மழையளவு பதிவு செய்யும் கருவியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எனவே, தமிழக அரசின் மூலம் கட்டப்பட்டுவரும் இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணியினை தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணராஜா, பால் பிரான்சிஸ், உதவிப் பொறியாளர் முத்துகுமார், அரசு ஒப்பந்ததாரர் சீமானூர் கணேசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அரிமளத்தில் ரூ.5.9 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : UAV ,Arimalat ,Collector ,Aruna ,Union ,Pudukkottai District ,Arimalam Uradachi Union Office Complex ,Department of Rural Development and Livestock ,EU ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு