×

அரியலூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

அரியலூர்,ஏப்.25: குடும்ப அட்டைதாரர் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40லிருந்து 90 சதவீதம் உயர்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர், 3ஆவது நாளாக நேற்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் லெனின், பொருளாளர் இருதயராஜ், மாவட்ட அமைப்பச் செயலர் சவேரியார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

The post அரியலூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Aadhaar ,Department for Public Distribution Plan ,
× RELATED கெடார் அருகே நள்ளிரவில் நகை கடை ஷட்டரை...