- கும்மி
- கோலாட்டா
- வடகாடு
- முத்துமாரியம்மன்
- கோவில்
- சித்திராய் திருவிழா
- புதுக்கோட்டை
- முத்து மரியம்மன் கோயில்
- புதுக்கோட்டை மாவட்டம்
- வடக்காடு முத்துமாரியம்மன் கோயில்
- கும்மி மற்றும் கோலாட்டா
புதுக்கோட்டை, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்காக பெண்கள் கும்மி, கோலாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ஏப்.27ம் தேதி காப்புக் கட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது. மே 5ம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தொடர் வாணவேடிக்கையோடு, முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.
காப்புக்கட்டியதில் இருந்து தினமும் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும். இரவில் அம்மன் வீதியுலாவின்போது பெண்கள் ஏராளமானோர் அலங்கரிப்பட்ட ஆரத்திக் குடங்களை சுமந்துகொண்டும், கோலாட்டம் மற்றும் கும்மி அடித்துக்கொண்டும் செல்வார்கள். இதற்காக, கடந்த சில தினங்களாக முத்துமாரியம்மன் கோயில் முன்பு இரவில் பெண்கள் ஏராளமானோர் முத்துமாரியம்மனை போற்றி பாடல் பாடிக்கொண்டு, கும்மி, கோலாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டம், குறுக்கு மறுக்கு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
The post சித்திரை திருவிழா துவங்குவதால் வடகாடு முத்துமாரியம்மன் கோயில் முன்பு பெண்கள் கும்மி, கோலாட்ட பயிற்சி appeared first on Dinakaran.
