×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி; திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் தீவிர சோதனை

திருமலை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்றுமுன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து ஒன்றிய அரசு உத்தரவின்பேரில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் உலகபிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் ஆர்டிசி பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அலிபிரி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதுதவிர மலைப்பாதைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏழுமலையான் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி; திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Extremist attack echoes ,Kashmir ,Tirupathi Eummalayan temple ,Thirumalai ,Tirupathi Eumalayan Temple ,Union ,Tirupathi ,Eumalayan ,Temple ,Mountaineering ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...