×

சிவகங்கையில் நாளை கால்பந்து பயிற்சி முகாம்

சிவகங்கை, ஏப்.24: சிவகங்கையில் நாளை முதல் கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை கால்பந்து கழக நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் 20ம் ஆண்டு கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 25 வரை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 5வயது முதல் 17வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள் பங்கேற்கலாம். காலை 6.30 மணி முதல் 8.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 வரையிலும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச சீருடை, சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 97895 39151, 86752 16868 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் நாளை கால்பந்து பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga Football Club ,Sivaganga Football Club… ,Dinakaran ,
× RELATED ஜவுளி சங்க பொதுக்குழு கூட்டம்