×

மண்டைக்காடு அருகே உறவினர்களுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

குளச்சல், ஏப்.24: மண்டைக்காடு அருகே புதூர் சிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் ஜான் தினேஷ் (37). அவரது மனைவி சகாய ரிபன்சியா (29). இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. ஒரே வீட்டில் வசித்தாலும் கணவன் மனைவி இருவரும் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தனர்.இருப்பினும் அவ்வப்போது இருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேி வீட்டில் ஜான் தினேஷ் இருந்தபோது, சகாய ரிபன்சியாவின் உறவினர்களான கடியப்பட்டினத்தை சேர்ந்த ஜோசப் ஆண்டனி, தினேஷ், மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், ஜான், கவிதன் ஆகியோர் வந்தனர்.அவர்கள் ஜான் தினேஷை கம்பால் சரமாரி தாக்கினர். சகாய ரிபன்சியாவும் கும்பலுடன் சேர்ந்து அடித்து உதைத்தாராம். இதில் காயமடைந்த ஜான் தினேஷ் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜான் தினேஷ் மண்டைக்காடு போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி சகாய ரிபன்சியா செல்போனில் பேசி உறவினர்களை வரவழைத்து தன்னை கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல் சகாய ரிபன்சியாவும் மண்டைக்காடு போலீசில் அளித்த புகாரில், கணவர் ஜான் தினேஷ் குடிபோதையில் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். இந்த இரண்டு புகாரின் அடிப்படையில் இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்டைக்காடு அருகே உறவினர்களுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி appeared first on Dinakaran.

Tags : Mandaikadu ,Kulachal ,John Dinesh ,Puthur CRS Nagar ,Sahayya Ripansiya ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி