×

தஞ்சாவூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர்,ஏப்.23: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கரு த்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற்றிடுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Farmers Reduction Day ,Tanjavur District Collector's Office ,Farmers' Reduction Gathering ,25th ,
× RELATED பெல் நிறுவன பிரிவுகளுக்குள்...