×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் மாநகராட்சி சார்பில், உலக பூமி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உலக பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சி மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து, நாமக்கல் உழவர் சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல், மஞ்சப்பை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர்கள் நந்தினிதேவி, கிருஷ்ணமூர்த்தி, தேசிய பசுமைப் படை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர், ஜான்ராஜா மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.

The post பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Plastic Abolition Awareness Show ,Namakkal ,Municipality ,World Earth Day ,Namakkal Municipality ,National Green Force ,Dinakaran ,
× RELATED 377 தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன்