×

பாளையில் கஞ்சா பதுக்கியவர் கைது

நெல்லை, ஏப். 22: பாளை சாந்திநகரில் 10 கிராம் கஞ்சாவை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை சாந்தி நகர் மணிக்கூண்டு அருகில் நேற்று மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்ஐ சந்திரா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த பாளை சமாதானபுரத்தை சேர்ந்த முத்தையா மகன் செல்வத்தை (40) சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவர் சுமார் 10 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிந்து செல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பாளையில் கஞ்சா பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellai ,Palai Shanthinagar ,Prohibition Division Police SI ,Chandra ,Palaiyankottai Shanthinagar ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா