×

அதானியின் 400 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது ஏர்டெல்

புதுடெல்லி: அதானி டேட்டா நெட்வொர்க் அமைப்பு கடந்த 2022ம் ஆண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை பெற்றது. அப்போது ரூ.212 கோடிக்கு இவற்றை வாங்கியது. தற்போது இவை அனைத்தையும் பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் துணை நிறுவனமான பாரதி ஹெக்ஸாகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் (100 மெகா ஹெர்ட்ஸ்), குஜராத்தில் (100 மெகா ஹெர்ட்ஸ்), ராஜஸ்தான் (50 மெகா ஹெர்ட்ஸ்), கர்நாடகா (50 மெகா ஹெர்ட்ஸ்), தமிழ்நாடு (50 மெகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைகள் இடம் பெற்றுள்ளன.

The post அதானியின் 400 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது ஏர்டெல் appeared first on Dinakaran.

Tags : Airtel ,Adani ,New Delhi ,Adani Data Networks ,Bharti Airtel ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் கட்கரியுடன்...